கந்த்வா:மத்திய பிரதேசத்தின் கலால் அதிகாரி ஒருவர், ‘மது அருந்துவோர் பொய் சொல்ல மாட்டார்கள்’ என கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்து உள்ளது. கொரோனா தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன்படி கந்த்வா மாவட்டத்தில் ‘இரு ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தியோருக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும்’ என, மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது. மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன.அவற்றில், இரு டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றினை காண்பித்தால் மட்டுமே மதுபானம் கிடைக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால் மாவட்ட கலால் அதிகாரி ஆர்.பி.கிரார் கூறியதாவது: மதுபானம் வாங்க வருவோர் தடுப்பூசி செலுத்தியது குறித்து வாய்மொழி உத்தரவாதம் அளித்தால் போதும். ஏனெனில் மது அருந்துவோர் பொய் சொல்ல மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கந்த்வா:மத்திய பிரதேசத்தின் கலால் அதிகாரி ஒருவர், ‘மது அருந்துவோர் பொய் சொல்ல மாட்டார்கள்’ என கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.