டில்லி: லக்கிம்பூர் கேரி விவகாரம் முன்னதாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதில் தொடர்புடைய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா உடன் மோடி கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதற்கு தற்போது அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் முன்னதாக யூனியன் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் தனது காரை ஏற்றியதில் நான்கு விவசாயிகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் முன்னதாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இதுதொடர்பாக தற்போது ஆஷிஷ் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அஜய் மிஸ்ரா பதவியை மத்திய பாஜ., அரசு பறிக்க வேண்டும் என்று முன்னதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில் தற்போது அஜய் மிஸ்ரா உடன் பிரதமர் மோடி முக்கிய கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியது. இவ்வாறு செய்வது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய 3 விவசாய மசோதாக்களை எதிர்த்து போராடி மரணமடைந்த 700 விவசாயிகளை அவமதிக்கும் செயல் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பஞ்சாப், ஹரியானா, டில்லி உட்பட பல மாநிலங்களில் போலீசார் நடத்திய தடியடி, வன்முறை சம்பவங்கள் காரணமாக விவசாயிகள் பலர் கொல்லப்பட்டனர். இந்தப் பட்டியலில் தற்போது லகிம்பூர் கெரி சம்பவத்தில் பலியான விவசாயிகளையும் சேர்த்து பிரியங்கா இந்த கருத்தை தெரிவித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement