குற்றச்செயல்களை தடுக்க போலீசார் ஒத்துழைப்பு தேவை: அமித் ஷா வலியுறுத்தல்| Dinamalar


லக்னோ : ”மாநில மற்றும் மத்திய அமைப்புகளை சேர்ந்த போலீசாருக்கும் இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு தேவை,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜி.,க்கள் மாநாட்டை துவக்கி வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: கொரோனா தொற்று காலத்தில் மாநில போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ போலீஸ் படையை சேர்ந்த போலீசார் சிறப்பாக பணியாற்றினர். தங்களை பற்றி கவலைப்படாமல் மக்களுக்கு சேவை செய்தனர் .

latest tamil news

மத்திய அமைப்புகளை சேர்ந்த போலீசாருக்கும், மாநில போலீசாருக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு தேவை. அப்போது தான் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு உட்பட பல்வேறு பிரச்னைகளிலும் மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற முடியும். பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்க ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.