புதுடில்லி : ராஜஸ்தான் அமைச்சரவை நாளை (நவ.21) விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் நான்கு பேர் அமைச்சரவையில் இடம் பெறுகின்றனர்.
.
ராஜஸ்தானில், 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்., வென்றது. இந்த வெற்றிக்கு, இளம் தலைவரான சச்சின் பைலட்டிற்கு முக்கியத்துவம் தரப்படாததால், கடந்தாண்டில் கட்சிக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி துாக்கினார். அவருக்கு, 18 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்தனர். சோனியா மற்றும் முன்னாள் தலைவர் ராகுல், பிரியங்கா ஆகியோர் பைலட்டிடம் பேசினர். அதையடுத்து அவர் சமாதானமடைந்தார்.
![]() |
ஓராண்டாகியும், சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு தரப்படவில்லை. இது தொடர்பாக நவ.11ல் முதல்வர் அசோக் கெலாட் டில்லி சென்று காங். மூத்த தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார்.
இதையடுத்து நாளை (நவ.21) அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் நான்கு பேர் அசோக்கெலாட் அமைச்சரவையில் இடம் பெறுகின்றனர். முன்னதாக முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின் புதிய அமைச்சர்கள் பட்டியலுடன் கவர்னரை சந்தித்து பட்டியலை முதல்வர் அசோக் கெலாட், வழங்கினார். நாளை (நவ.21) கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
Advertisement