சீன ஆக்கிரமிப்பு உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும்: ராகுல்| Dinamalar


டில்லி: லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறுவதும், அதற்கு நம் ராணுவம் பதிலடி கொடுப்பதும் அடிக்கடி நடக்கும் சம்பவமாக உள்ளது. இது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும் விரிசல் தொடர்கிறது.
இந்நிலையில், சிங்கப்பூரில் நடந்த கருத்தரங்கில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசும் போது, ஒப்பந்தங்களை சீனா தொடர்ந்து மீறி வருவதால், சீனாவுடனான இந்தியாவின் உறவு மோசமாக உள்ளது எனக் கூறியிருந்தார்.

latest tamil news

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட அறிக்கையில், சீனா உடனான எல்லை பிரச்னையில், சீன ஆக்கிரமிப்பு என்ற உண்மையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.