வேளாண் சட்டம் வாபஸ் போல சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெற கோரிக்கை| Dinamalar


புதுடில்லி: புதிய வேளாண் சட்ட வாபஸ் அறிவிப்பை தொடர்ந்து ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெறும்படி அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி கூறியதாவது: புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று மன்னிப்பு கோரியது வரவேற்க தக்கது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தோல்வி பயத்தினால் பா.ஜ., அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

latest tamil news

ஓட்டுக்காக நாட்டின் பிற மாநிலங்களில் இறங்கி வரும் பா.ஜ., அரசு, ஜம்மு – காஷ்மீர் மக்களை மட்டும் தண்டிக்கிறது. இங்கு பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பவர்களை மகிழ்விப்பதற்காகவே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது போல, ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.