வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: அயோத்தியில் சுட்டுக் கொல்லப்பட்ட கர சேவகர்களின் ரத்தத்தில் சமாஜ்வாதி கட்சியின் தொப்பி வர்ணம் பூசப்பட்டுள்ளதாக உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அயோத்தியில் சுட்டுக் கொல்லப்பட்ட கர சேவகர்களின் ரத்தத்தில் சமாஜ்வாதி கட்சியின் தொப்பி வர்ணம் பூசப்பட்டுள்ளது. சிவப்பு தொப்பிகளை குண்டர்கள் போல் அவர்கள் அணிந்துள்ளனர். முந்தைய சமாஜ்வாதி அரசு மாநிலத்தின் ஏழை மக்களை புறக்கணித்தது. வாசனை திரவிய வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சில நண்பர்களுக்காக மட்டுமே அந்த அரசு வேலை செய்தது.

குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்தாலும், உண்மையை மாற்ற முடியாது. அவர்கள் உத்தர பிரதேசத்தையும் அதன் மக்களையும் தங்களுடையவர்களாக ஒரு போதும் கருதவில்லை. அவர்களது கருத்துக்கள் பாகிஸ்தானை மையமாகக் கொண்டவை. 2017ம் ஆண்டுக்கு முன், மாநிலத்தில் ஒவ்வொரு மூன்றாவது நாளுக்கு ஒருமுறை கலவரங்கள் நிகழ்ந்தது, பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பயப்படுவார்கள். பா.ஜ., ஆட்சியில் இது மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement