பஞ்சாபில் ராகுலிடம் பிக்பாக்கெட்? மாஜி அமைச்சர் பேச்சால் சர்ச்சை!| Dinamalar


புதுடில்லி-பஞ்சாபுக்கு சென்றபோது காங்., முன்னாள் தலைவர் ராகுலிடம் ‘பிக்பாக்கெட்’ அடிக்கப்பட்டதாக, அகாலி தள மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் காங்., முன்னாள் தலைவர் ராகுல், சமீபத்தில் அங்கு பயணம் மேற்கொண்டார். அமிர்தசரசில் பொற்கோவிலுக்கு சென்றார். பின் ஜலந்தர் சென்ற அவர், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் பேரணியில் பங்கேற்றார்.

இந்நிலையில் அகாலி தளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:பொற்கோவிலுக்கு ராகுல் சென்றபோது அவரிடம் ‘பிக்பாக்கெட்’ அடிக்கப்பட்டுள்ளது.’இசட்’ பிரிவு பாதுகாப்பு உள்ளதால், ராகுலுக்கு அருகில் செல்ல சரண்ஜித் சிங் சன்னி, கட்சியின் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா போன்ற ஒரு சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அப்படியானால் யார் பிக்பாக்கெட் அடித்திருப்பர்? ஒருவேளை பொற்கோவிலின் புனிதத்தை கெடுப்பதற்காக இவ்வாறு பொய்யாக கூறினரா என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதற்கு காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ”இது போன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை; அரசியலில் முதிர்ச்சி தேவை,” என, அவர் கூறியுள்ளார்.

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.