வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:”புதிய நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளுடன், எச்.டி., வடிவில், பொதிகை சேனல் விரைவில் மேம்படுத்தப்படும்,” என, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் முருகன் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை பார்வையிடுவதற்காக, மத்திய இணையமைச்சர் முருகன், சென்னையில் உள்ள பொதிகை தொலைக்காட்சி நிலையத்திற்கு சென்றார்.மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமரின் பாராட்டை பெற்ற, திருப்பூர் இளநீர் வியாபாரி தாயம்மாளை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

மேலும், துார்தர்ஷன், ‘டிவி’ நிலையத்தின் பல்வேறு அலுவலகங்களை பார்வையிட்ட பின், முருகன் அளித்த பேட்டி:புதிய நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளுடன், எச்.டி., வடிவில், பொதிகை சேனல் விரைவில் மேம்படுத்தப்படும். உள்ளூர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தரமான நிகழ்ச்சிகளைத் தர வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
இந்த விஷயத்தில் யாருடைய வேலைக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பின், சென்னையில் பிப்., 15ல், அது தொடர்பான மாநாடு நடைபெறும். அதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில், வர்த்தகத் துறை பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் பங்கேற்பர்.இவ்வாறு அவர் கூறினார். துார்தர்ஷன் ‘டிவி’ யின் தலைமை இயக்குனர் மயங்க் அகர்வால் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Advertisement