வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தானே: வெங்காயம், உருளை விலை குறைப்பதற்காக பிரதமர் ஆகவில்லை மோடி. இவைகளின் விலை ஏற்ற காரணத்தை புரிந்து கொண்டால் அவரை ( பிரதமரை) குறை சொல்ல மாட்டீர்கள் என மத்திய அமைச்சர் கபில் பாட்டில் கூறினார்
![]() |
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறையின் இணை அமைச்சர் கபில் பாட்டில் கலந்து கொண்டு பேசியதாவது: வெங்காயம் , உருளை கிழங்கு விலையை குறைக்க மோடி பிரதமராக வில்லை. இந்த பொருட்களின் விலையேற்றத்திற்கான காரணத்தை மக்களாகிய நீங்கள் புரிந்து கொண்டால் அவரை (மோடியை ) குறை சொல்ல மாட்டீர்கள். மேலும் பண வீக்கம் மற்றும் பொருட்களின் விலை உயர்வை யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.
அதே நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரால் மட்டுமே நாட்டிற்கு சில நல்ல விசயங்களை செய்ய முடியும். குடியுரிமைச்சட்டம் கொண்டு வருதல் போன்ற துணிச்சலான காரியங்கள் மற்றும், காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான 370 வது சட்டப்பிரிவு நீக்கம் செய்துள்ளார்.
இதனால் அநேகமாக வரும் 2024 ம் ஆண்டிற்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிகள் இந்தியாவிற்கு திரும்பும் என மத்திய அமைச்சர் கூறினார். மேலும் ஆட்டு இறைச்சியை ரூ.700க்கும், பீட்சாவை ரூ.500 முதல் ரூ.600க்கும் எங்களால் வாங்க முடியும். அதே நேரத்தில் வெங்காயம் 10 ரூபாய்க்கும் தக்காளியை ரூ.40க்கும் வாங்குவது எங்களுக்கு செலவாகும்.
![]() |
வெங்காயம், உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு, இவற்றில் இருந்து முதலில் வெளியே வர வேண்டும். நாடு இல்லையென்றால் வெங்காயம், உருளைக்கிழங்கு எங்கிருந்து வாங்குவோம். முதலில் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். இவர்கள் நாட்டைக் காப்பாற்றும் பணியை முன்னெடுத்துள்ளனர் என அவர் கூறினார்.
Advertisement