ஆரோவில்: “50 ஆண்டுகள் கடந்தும் அன்னையின் கனவு நிறைவேறவில்லை!” – ஆளுநர் தமிழிசை | In Auroville city, even 50 years later mother’s dream has not come true said governor thamizhisai


புதுச்சேரி மாநிலத்தையொட்டிய தமிழ்நாட்டுப்பகுதியான ஆரோவில் நகரத்தில், நேற்று மாலை ஆரோவில் சமுதாய உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, “1968-ம் ஆண்டு சமாதான பூமியான ஆரோவில் நகரை என்ன நினைத்து அன்னை தொடங்கினார்களோ அந்த கனவு முழுமைடைய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு நிர்வாகக் குழு செயல்பட்டு வருகிறது என்பதை முதலிலேயே மிகத் தெளிவாக பதிவு செய்கிறேன். உலகிற்கு ஒரு மகுடம் போல இந்த நகரம் உருவாக வேண்டும் என்றும், ஏறக்குறைய 50,000 பேர் இங்கே வாழ வேண்டும் என்றும், உலகத்திற்கு ஒரு உதாரணமான அமைதி நகரமாக விளங்க வேண்டும், பாலின, நாடு, சாதி, மத வேற்றுமைகள் இல்லாமல் வாழக்கூடிய ஒற்றுமை நகரமாக இது அமைய வேண்டுமென்றும் அன்னை நினைத்தார்கள்.

ஆளுநர் தமிழிசை

ஆளுநர் தமிழிசை

ஆனால், துரதிஷ்டவசமாக 50 ஆண்டுகள் கடந்தும் அவரது கனவு இன்று நிறைவேறவில்லை. அன்னையின் கனவு நனவாவதை விரைவுபடுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நிர்வாகக் குழு பணிகளை விரைவுபடுத்தி வருகிறது. தற்போதைய செயலர் மிகவும் ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் பணிகளை ஆற்றி வருகிறார். தமிழ்நாடு ஆளுநர் இதற்கு தலைவராக இருக்கிறார். நிர்வாகக் குழு தொடர்ந்து கூடுகிறது. திட்டமிடப்பட்டு அதற்கேற்ப பணிகள் நடைபெறுகின்றன. இயற்கையை அழிக்க வேண்டும் என்றோ, குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றோ அல்லது இங்கிருப்பவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த வேண்டும் என்றோ எந்த நோக்கமும் கிடையாது. ஆக்கப்பூர்வமான நோக்கம் மட்டும்தான்.

Source link


Leave a Reply

Your email address will not be published.