சிக்ஸர்களை வாரி வழங்கிய மோசமான சாதனை.. முதலிடத்தில் ஆர்சிபி பவுலர்கள்!


ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்துவீச்சில் இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் மொத்தமாக 31 சிக்ஸர்கள் சென்றுள்ளன.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகமான சிக்ஸர்களை வாரி வழங்கி பந்துவீச்சாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்துவீச்சில் இந்த ஐபிஎல் சீசன் முழுமைக்கும் மொத்தமாக 31 சிக்ஸர்கள் சென்றுள்ளன. இது ஐபிஎல் போட்டிகளில் தனி ஒரு பவுலர் விட்டுகொடுத்த அதிகபட்ச சிக்ஸர்கள் ஆகும். இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ ஒரு சீசனில் அடிக்கவிட்ட 29 சிக்ஸர்களே அதிகபட்சமாக இருந்தது.

image

அதேபோல ஆர்சிபி அணியின் மற்றொரு வீரரான வனிந்து ஹசரங்கா, சிராஜிக்கு அடுத்தபடியாக இந்த சீசனில் 30 சிக்ஸர்களை வாரி வழங்கியுள்ளார். இருப்பினும், நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை (26 விக்கெட்) வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் விட்டுக்கொடுத்த டாப் 10 பவுலர்கள்:

முகமது சிராஜ் – 31 (2022)
ஹசரங்கா – 30 (2022)
பிராவோ – 29 (2018)
சாஹல் – 28 (2015)
சாஹல் – 27 (2022)
குல்தீப் யாதவ் – 24 (2018)
ரபாடா – 24 (2021)
ஷர்துல் தாக்கூர் – 24 (2018)
மலிங்கா – 23 (2019)
ஹர்திக் பாண்டியா – 23 (2019)

இதையும் படிக்கலாம்: தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? – கோலியும், 2022 சீசனும்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link


Leave a Reply

Your email address will not be published.