நெருப்பு ராசியில் செவ்வாயுடன் ராகு கூட்டணி..என்னென்ன பாதிப்பு – பரிகாரம் யாருக்கு | Chevvai Rahu conjuction: Mars Rahu alliance in fire sign Mesham what effect


Astrology

oi-Jeyalakshmi C

Google Oneindia Tamil News

சென்னை: செவ்வாய் ராகு சேர்க்கை நெருப்பு ராசியில் என்பதால் நெருப்பினால் ஏற்படும் விபத்துகள், விமான விபத்துக்கள், மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் ஏற்படும். சனி செவ்வாய் பகை கிரகங்கள் பார்வை, செவ்வாய் ராகு சேர்க்கை, கேது செவ்வாய் பார்வையால் பூமிக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துமாம்.

பொதுவாக பகை கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்தாலே, கூட்டணி சேர்ந்தாலோ பாதிப்புகள் ஏற்படும். நெருப்பினால் மின்சாதனங்களினால் திடீர் விபத்துகள் ஏற்படும். ஆந்திராவில் ஆட்டோவில் சென்றவர்கள் மீது மின்கம்பி அறுந்து விழுந்து சம்பவ இடத்திலேயே எட்டு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் கூட கிரக சேர்க்கையினால் ஏற்படும் விபத்துதான்.

செவ்வாய், ராகு கூட்டணி நெருப்பு ராசியான மேஷ ராசியில் இணைந்துள்ளது. துலாம் ராசியில் இருந்து கேது பார்வை கிடைக்க கும்ப ராசியில் இருந்து சனியின் பார்வையும் செவ்வாய் ராகுவின் மீது விழுகிறது. செவ்வாய் ராகுவுடன் இணைவு மற்றும் கோட்சார வக்ர சனி, கேது பார்வை பெறுகிறார்.

கிரக சேர்க்கை

கிரக சேர்க்கை

செவ்வாய் ரத்தகாரகன், சகோதர காரகன், ராகு உடன் சேர்க்கை பெற்றுள்ளார். சனி ஆயுள்காரகன், செவ்வாயும், சனியும் பகை கிரகங்கள் ஒரு ராசியில் இரண்டும் சேர்ந்தாலோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலோ பாதிப்புகள் ஏற்படுவது இயற்கை.

 இயற்கை பேரிடர்கள்

இயற்கை பேரிடர்கள்

இந்த கோச்சார கிரக சேர்க்கை அவ்வளவாக நல்ல சேர்க்கையல்ல,மாறாக இந்த கிரகச்சேர்க்கை சில பாதிப்புகளை ஏற்படுத்தும். தனிபட்ட நபருக்கும்,உலகநாடுகளில் சில இயற்கை பேரிடர்களை ஏற்படுத்தும். செவ்வாய் ராகு சேர்க்கை நெருப்பு ராசியில் என்பதால் நெருப்பினால் ஏற்படும் விபத்துகள், விமான விபத்துக்கள், மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் ஏற்படும்.

 விபத்துக்கள்

விபத்துக்கள்

சனி செவ்வாய் பகை கிரகங்கள் பார்வை, செவ்வாய் ராகு சேர்க்கை, கேது செவ்வாய் பார்வையால் பூமிக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துமாம். நிலநடுக்கம்,சுனாமி,ரயில் விபத்துக்கள்,அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்புஅளித்தல் போன்றவை மிக மிக முக்கியம்.

நெருப்பில் கவனம்

நெருப்பில் கவனம்

இந்தியாவை பொருத்தவரை சில இடங்களில்,ரயில் விபத்து,மற்றும்,நெருப்பினால் ஏற்படும் விபத்து,நிலநடுக்கம்,ஏற்பட அதிக வாய்பு உள்ளது என்பதால் கவனம் தேவை. தமிழகத்தை பொருத்த வரையில் முக்கிய நகரங்களில் நெருப்பினால் விபத்துகள்,திடீர் கலவரங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே கவனம் தேவை.

மேஷம்

மேஷம்

ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியில் உள்ள ராகு உடன் இணைகிறார். மன அழுத்தம் ஏற்படும் காரணம் சனிபகவானின் நேரடி பார்வையும் கேதுவின் நேரடி பார்வையும் உங்கள் ராசியில் உள்ள செவ்வாய், ராகு மீது விழுகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். முருகப்பெருமானை வணங்கி கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே செவ்வாய் உங்கள் தளபதி..உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் ராகு உடன் அமர்ந்திருக்கிறார். உடல் நலக்கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளது. முதுகு பிரச்சினைகள் வரலாம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தொழில் வருமானத்தில் லாபம் அதிகரிக்கும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். உடல் நலப்பிரச்சினைகள் தீரும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். வெளி உணவுகளை சாப்பிட வேண்டாம். கர்ப்பிணிப்பெண்கள் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் தீர கணபதியை வணங்கவும். கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

யாருக்கு பரிகாரம்

யாருக்கு பரிகாரம்

மேஷம், துலாம், ராசிக்காரர்கள் வாகனத்தில் செல்லும்போது தலைகவசத்துடன் செல்வது அவசியம். விபத்தோ,வம்பு வழக்கோ,வாய் தகராரோ நெருப்போ,மிகுந்த கவனம் தேவை. நரசிம்மர்,வாராகி,ஆஞ்சநேயர்,விநாயகர், பிரித்யங்கரா,சரபேஸ்வரர்,ராகு கேது வழிபாடுகள் மந்திர பாராயணங்கள் செய்வது பாதிப்பை குறைக்கும்.

English summary

Chevvai peyarchi Mesham rasi with Rahu( மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சி ராகு உடன் கூட்டணி பாதிப்பு என்ன) Mars Transit in Mesham conjuction with Rahu what is the effect and remedies.

Story first published: Friday, July 1, 2022, 14:17 [IST]

Source link


Leave a Reply

Your email address will not be published.