Astrology
oi-Jeyalakshmi C
சென்னை: சனி பகவான் வக்ர கதியில் பயணம் செய்யும் இந்த காலத்தில் முதல் ராசியான மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
ஜூன் 5ஆம் தேதியில் இருந்து சனி வக்ரமாக பயணம் செய்தாலும் ஜூலை 12ஆம் தேதி வரை சனி வக்ரமாக இருப்பார். ஜூலை 12 முதல் அக்டோபர் 22ஆம் தேதி வரைக்கும் சனிபகவான் மகர ராசியில் பயணம் செய்வார்.
சனிபகவான் கர்மகாரகன். ஆயுள்காரகன் என்பதால் சனி பெயர்ச்சி, சனி வக்ர பெயர்ச்சி போன்றவை கவனிக்கப்படுகிறது. அதை வைத்து சில முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர். காலம் பார்த்து செய்யும் காரியம் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. சனி வக்ர பெயர்ச்சியடையும் இந்த கால கட்டத்தில் மேஷ ராசியில் பிறந்தவர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
சனி வக்ர பெயர்ச்சி.. மகரத்திற்கு திரும்பும் சனியால் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தெரியுமா?

தொழில் ஸ்தான சனி
மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்து, 11ஆம் வீட்டிற்கு அதிபதி. தொழில், லாப ஸ்தான அதிபதி. தொழில், வேலையில் உங்களின் திறமை அதிகரிக்கும். தொழில் ஸ்தான அதிபதி சனி லாப நிலையில் இருந்து வக்ர கதியில் பயணம் செய்கிறார். மன அமைதி இழந்து தவிக்கிறீர்கள் பொறுமை தேவை.

உடல் ஆரோக்கியம்
சனி பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு வக்ர கதியில் பயணம் செய்யும் சனியால், வேலையில் முன்னேற்றம் உண்டாகும். சனிபகவான் பார்வை விழும் காலத்தில் பயணங்கள் பதற்றம் உருவாகும். உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கோபமும் டென்சனும் அதிகரிக்கும். வேலை மாற்றம் எதுவும் தேவையில்லை.

காரிய வெற்றி
ஜூலை 12ஆம் தேதிக்கு மேல் சனிபகவானின் பார்வை சாதகமான இடத்தில் விழுகிறது. உங்கள் ராசிக்கு 12,4,7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. போராடி வெற்றி பெறுவீர்கள். திடீர் பண வரவு வரும் கடன் பிரச்சினைகள் நீங்கும். குரு விரைய ஸ்தானத்தில் பயணிக்கும் இந்த கால கட்டத்தில் சனி பகவானும் பின்நோக்கி பயணம் செய்வதால் வேலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.

பொருளாதார நிலை
பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும். லாப ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் தொழில் ஸ்தானத்திற்கு செல்வதால் வேலை, தொழில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும். பொறுமையும் நிதானமும் அவசியம். பேச்சில் கடுமை தவிர்க்கவும்.
English summary
Sani vakra peyarchi 2022: (சனி வக்ர பெயர்ச்சி 2022) Saturn will be retrograde will continue to do so till October 23. Let us know at how it will affect Mesham rasi.