தம்பியுடன் சொத்து தகராறு அண்ணன் தற்கொலை| Dinamalar


பெலகாவி-சொத்து தகராறில் தம்பியின் தொந்தரவு தாளாமல், அண்ணன் தற்கொலை செய்து கொண்டார்.பெலகாவி அருகே உள்ள உச்சகாம்வ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ஜாதவ், 56. இவருக்கும், இவரது தம்பி மதுகர் ஜாதவ், 50 இடையே நீண்ட காலமாக நிலப்பிரச்னை உள்ளது. இது தொடர்பாக, அண்ணனுக்கு, தம்பி அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தார்.இந்நிலையில், தம்பி மதுகர் ஜாதவ், நான்கு ஆண்டுகளுக்கு முன் தந்தை, அண்ணனுக்கு தெரியாமல் 1 ஏக்கர் நிலத்தை, 28 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தார். இவ்விஷயம் தெரியவந்தவுடன், தம்பி மீது அண்ணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, 6 லட்சம் ரூபாய் கொடுத்து, அண்ணனை தம்பி சமாதானப்படுத்த முயன்றார். இதற்கு அண்ணன் ஒப்பு கொள்ளவில்லை.இதை தொடர்ந்து, கிராமத்தில் பெரியவர்கள் முன்னிலையில் சில நாட்களுக்கு முன் ஊர் பஞ்சாயத்து நடந்தது. அங்கு தம்பியும், அவரது மனைவியும் மிரட்டல் விடுத்தனர். ஊர் பெரியவர்களும் தம்பிக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அண்ணன், நேற்று முன்தினம் இரவு, தோட்டத்தில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.