News
oi-Jeyalakshmi C
சென்னை: நோய்கள் பரவும் இந்த கால கட்டத்தில் யாருக்கு எந்த நோய் பாதிக்கும் யாருக்கு திடீர் மரணம் ஏற்படும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ஜாதகத்தில் ஆறாம் இடம் என்னும் நோய்களை குறிப்பிடும் அமைப்பைப் பற்றிப் பார்க்கலாம்.
இப்பொழுதுதெல்லாம் புதிது புதிதாக நோய்கள் வந்து கொண்டிருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் தப்பிப்பிழைக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். நோய் பாதிப்பிற்கு நவ கிரகங்களும் காரணமாக உள்ளன.
அடேயப்பா.. அடுத்த 3 நாட்களுக்கு செம மழைதான்.. வெளியான அசத்தல் அறிவிப்பு.. எங்கனேன்னு பாருங்க
ஆறாம் பாவத்தில் எந்த கிரகமும் ஆட்சி, உச்சம் அல்லது நீச்சம் பெற்று இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் எந்த கிரகம் உள்ளதோ அந்த கிரகத்தின் நோய்கள் தாக்கும். ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் பாவம் சுத்தமாக இருந்தால், அந்த நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். சின்னச் சின்ன காய்ச்சல், ஜலதோஷம், வாயு தொல்லை தவிர பெரிய அளவில் நோய்கள் தாக்காது.

நோய்கள் பாதிப்பு
சுப கிரகங்களான சூரியன், சந்திரன், குரு, புதன், சுக்ரன் ஆகியவை ஒருவரின் ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகர் அதிர்ஷ்டசாலி. இவற்றுக்கு மாறாக செவ்வாய், சனி, ராகு, கேது இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். எந்த நேரமும் நோய் தாக்கும் அதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டி வரும்.

திடீர் ராஜயோகம்
ஆறாம் இடத்துக்கான அதிபதி வலுக்கக்கூடாது. 6ஆம் இடத்தின் அதிபதி 8, 12 ஆகிய இடங்களில் இருப்பதும், நீச்சம் பெற்று இருப்பதும் ஜாதகருக்கு நன்மையே செய்யும். திடீர் ராஜயோகம் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் கை கூடும். ஆறாம் பாவாதிபதி தசை நடக்கக் கூடாது.

உடல் ஆரோக்கியம்
ஒருவரின் ஜாதகத்தில் ஆறாம் இடத்துக்கு அதிபதியுடன் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது சேர்ந்து இருக்கக்கூடாது. பெரும்பாலும் ஆறுக்குடையவன் தனித்து நிற்பது நல்லது. இதை தவிர வேறு கெட்ட கிரக சேர்க்கை இல்லாமல் இருப்பதும் நல்லது. ஆறாம் பாவாதிபதி ஆறில் நிற்பதும், 12ஆம் இடத்தில் நிற்பதும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். மன தைரியம் பாதி நோயை போக்கி விடும்.

கிரகங்கள் தரும் நோய்கள்
ஆறில் சூரியன் நின்றால், இந்த ஜாதகர் அரசாங்க உத்தியோகம் அல்லது அரசு டெண்டர் மற்றும் அரசு வகையில் வழியில் பணம் சம்பாதிப்பார். வசதியாகவும் வாழ்வார். சூரிய தசை நடக்கும் போது சூரியன் கிரகத்திற்குரிய அனைத்து நோய்களும் வரக்கூடும். தலைவலி, நெஞ்சு வலிகள், இதய அடைப்பு, இதய மாற்று அறுவை சிகிச்சை, ஆஞ்சியோ போன்றவை வரக்கூடும்.

நுரையீரல் பிரச்சினை
சந்திரன் ஆறில் நிற்பதால், உழைப்பால் உயர்ந்தவர் என்ற பெயர் எடுப்பார்கள். ஆறாம் பாவத்தில் சந்திரன் நின்றால், சந்திரனுக்கு உரிய அனைத்து நோய்களும் வரக்கூடும். நீர் கிரகம் என்பதால் நீர் தொடர்பான ஜலதோஷம், நுரையீரல் பிரச்சினை, கெட்ட நீர் உடலில் சேர்வதும், உடல், முகம் வாட்டம் காண்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

உடல் நல பாதிப்பு
ஆறில் செவ்வாய் நின்றால், ஜாதகர் பெயரில் சொந்த நிலமாவது இருக்கும். புதிய பூமி வாங்க முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். செவ்வாய் கிரகத்திற்கு உரிய அனைத்து நோய்களும் வரும். உடல் சூடு, வெப்ப கட்டிகள், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள், ரசாயனம், விஷம் மூலம் புதிய ரத்தத்தை உற்பத்தி செய்யும் உறுப்பு களில் பாதிப்பு இருக்கும். உடல் சோர்வு இருக்கும்.

நரம்பு நோய்கள்
ஆறாம் பாவத்தில் புதன் நின்றால், இந்த ஜாதகர் தனது அறிவு, பேச்சு சாமர்த்தியத்தால் குறைந்த பட்சம் சில லட்சங்களுக்கு அதிபதியாக இருப்பார். புதனுக்குரிய உரிய அனைத்து நோய்களும் வரக்கூடும். மூச்சு திணறல், நரம்பு முடிச்சு போடுவது, நரம்பு வெடிப்புகள், கை கால் முடக்கம் ஆவது, உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் நரம்புகள் இழுத்து பிடிப்பது போன்ற பிரச்சினைகள் தோன்றும்.

கோடீஸ்வர யோகம்
குரு ஆறில் நின்றவர்கள் கோடீஸ்வரன் என்று தான் கூற வேண்டும். யோக தசைகளில் பல கோடிகள் சம்பாதிப்பார்கள் என்பது ஜோதிட விதி. ஆறாம் பாவத்தில் குரு நின்று இருந்தால், உடல் பருமன், உடல் சோர்வு, முகவாய் பிளவு, பற்களில் சிதைவு, கணையம், மண்ணீரல் போன்றவற்றில் பிரச்சினைகள் வரலாம். சிலருக்கு ஞாபக மறதி இருக்கும்.

குபேரன் ஆகும் யோகம்
ஆறாம் பாவத்தில் சுக்ரன் நின்றால், இந்த ஜாதகருக்கு நல்ல யோக தசை நடப்பில் இருந்தால், குபேரன் ஆகும் யோகம் பெறுவார். ஜாதகருக்கு நீரிழிவு நோய் வரும். கெட்ட கொழுப்பு உடல் உபாதை தரும். கெட்டியாக கபம் கட்டும். காச நோய், சுவாச கோளாறுகள் வரக்கூடும். கண்களில் பிரச்சினை ஏற்படும்.

சனி தரும் நோய்கள்
ஆறாம் பாவத்தில் சனி நின்றால், ஜாதகரை பல வகையான நோய்கள் தாக்கக் கூடும். இந்த ஜாதகருக்கு நல்ல யோக தசை நடப்பில் இருந்தால், அவர் தப்பிப் பிழைப்பார். பித்தம், உடல் கஷ்டம், என்ன நோய் என்றே காண முடியாத மர்ம நோய்கள், தொற்று நோய்கள் உருவாகி, ஆயுள் வரை மருத்துவம் பார்க்கும் நிலையை உருவாக்கும். போதை வஸ்துகள் மற்றும் உண்ணும் உணவுகளில் கூட நோய் தாக்கம் ஏற்படும்.

விஷ ஜந்துக்களால் பாதிப்பு
ஆறில் ராகு நின்றால், குறுக்கு வழியில் பணம் தேடி வரும். பினாமி ஆகும் வாய்ப்பு உண்டு. பலவிதமான உடல் உபாதைகள் தொல்லை தரக்கூடும். வாயு தொல்லையால் கை கால் பிடிப்பு, தசை வலிகள் உண்டாகும். விஷ வண்டுகள், பாம்பு, தேள் போன்றவற்றால் ஆபத்து வரலாம். இந்த ஜாதகருக்கு யோக தசை நடப்பில் இருந்தால் கெடுதல் குறையும். ஆறில் கேது நின்றால், உடலில் தோல் வியாதிகள் வரக்கூடும். உடலில் கெட்ட வாடை அடிக்கும். எந்த நேரமும் ஏதாவது ஒரு உபாதை இருந்து கொண்டே இருக்கும். உடல் சோர்வும், மனசோர்வும் வாட்டி எடுக்கும். இந்த ஜாதகருக்கு யோக தசை நடந்தாலும் அந்த ஜாதகரை படாதபாடு படுத்திவிடுவார் கேது.
English summary
Medical astrology: (ஜாதக ரீதியாக ஏற்படும் நோய்களும் பாதிப்புகளும்) No one can predict who will be affected by which disease and who will die suddenly in this time of disease spread. Let’s look at the system that indicates the diseases of the sixth house in the horoscope.
Story first published: Saturday, July 2, 2022, 13:03 [IST]