சனி வக்ர பெயர்ச்சி பலன் 2022: யோக காரகன் சனி பகவானின் பார்வையால் யோகமா? சோகமா? | Sani vakra peyarchi 2022: Shani Vakram how Affects Rishabam Rasi palan


News

oi-Jeyalakshmi C

Google Oneindia Tamil News

சென்னை: சனிபகவான் கர்மகாரகன். ஆயுள்காரகன் என்பதால் சனி பெயர்ச்சி, சனி வக்ர பெயர்ச்சி போன்றவை கவனிக்கப்படுகிறது. அதை வைத்து சில முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர். காலம் பார்த்து செய்யும் காரியம் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. சனி பகவான் வக்ர கதியில் பயணம் செய்யும் இந்த காலத்தில் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ஜூன் 5ஆம் தேதியில் இருந்து கும்ப ராசியில் சனி வக்ரமாக பயணம் செய்தாலும் ஜூலை 12ஆம் தேதி வரை சனி வக்ரமாக மகர ராசியில் இருப்பார். ஜூலை 12 முதல் அக்டோபர் 22ஆம் தேதி வரைக்கும் சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் பயணம் செய்வார்.

பிற்பகல் 80.. மிட்நைட் 70.. எடப்பாடி வீட்டிற்கு அடுத்தடுத்து சென்ற கார்கள்! நேற்று இரவு என்ன நடந்தது பிற்பகல் 80.. மிட்நைட் 70.. எடப்பாடி வீட்டிற்கு அடுத்தடுத்து சென்ற கார்கள்! நேற்று இரவு என்ன நடந்தது

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் யோக காரகன் சனி வக்ர பெயர்ச்சியடையும் இந்த கால கட்டத்தில் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் என்னமாதிரியான பலன்களைத் தரப்போகிறார். ரிஷப ராசிக்காரர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

சனி வக்ர பெயர்ச்சி

சனி வக்ர பெயர்ச்சி

சனி பகவான் மந்த காரகன் என்பதால் உங்களுக்கு சின்னச்சின்ன இடர்பாடுகள் ஏற்படும். சனி பகவான் ரிஷப ராசிக்கு நற்பலன்களைத் தரக்கூடியவர். சனிபகவான் தர்மகர்மாதி யோகத்தை தரக்கூடியவர். ஏனென்றால் உங்கள் பாக்யாதிபதியும் அவர்தான் தர்ம கர்மாதிபதியும் சனிபகவான்தான். சனி பகவான் யோக கிரகம் வக்ர கதி அடையும் போது நற்பலன்கள் குறையும். அதே நேரத்தில் பெரிய பாதிப்புகளை தர மாட்டார்.

சனிபகவான் பார்வை

சனிபகவான் பார்வை

ஆட்சி பெற்ற கிரகங்கள் வக்ரமானால் சுமாரான பலனையே தரும். சனிபகவான் தர்ம கர்மாதிபதி யோகத்தோடு இயங்குகிறார். பத்தில் சனி வக்ரமடைந்திருப்பதால் மகரத்தில் இருந்து பார்க்கும் பார்வை அதிக பாதிப்பை தராது. தசாபுத்தி சரியாக நல்ல நிலையில் இருந்தால் உங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை தராது.சனிபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் இருந்து பாக்ய ஸ்தானத்திற்கு செல்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டையும், மூன்றாம் வீட்டினையும், ஆறாம் வீட்டினையும் பார்வையிடுகிறார்.

வேலை சிக்கல் நீங்கும்

வேலை சிக்கல் நீங்கும்

உங்கள் வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்கள் வாழ்க்கையை மாற்ற நினைத்திருப்பீர்கள். எல்லமே தடையாக இருந்தது. இந்த வக்ர காலத்தில் சில முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். நோய் பாதிப்புகள் வந்து நீங்கும். இந்த கால கட்டத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பண முதலீடு வேண்டாம்

பண முதலீடு வேண்டாம்

இந்த வக்ரகதி காலத்தில் பெரிய அளவில் பண முதலீடுகளைச் செய்ய வேண்டாம். அகலக்கால் வைக்க வேண்டாம். தொழில் வியாபரத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளிடம் பகைத்துக்கொள்ள வேண்டாம். சிக்கல்கள் அதிகரிக்கும். புது வீடு வாங்க முயற்சி செய்ய வேண்டாம். பழைய வீட்டை வாங்கி புதுப்பிக்கலாம்.

முயற்சிக்கு வெற்றி

முயற்சிக்கு வெற்றி

இந்த கால கட்டத்தில் உங்களின் புகழ் பரவும் செல்வாக்கு அதிகரிக்கும். ரிஷப ராசி ரிஷப லக்னகாரர்களுக்கு வக்ர சனியினால் இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும். புதிய வண்டி வாகனங்களை இந்த காலத்தில் வாங்க வேண்டாம். வம்பு வழக்கு பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடும் உழைப்புக்கும் முயற்சிக்கும் வெற்றி கிடைக்கும்.

English summary

Sani vakra peyarchi 2022: (சனி வக்ர பெயர்ச்சி 2022 ரிஷப ராசி ) Saturn will be retrograde will continue to do so till October 23. It is going to have some positive as well as negative effects on zodiac signs. Let us know at how it will affect Rishabam rasi.

Story first published: Monday, July 4, 2022, 10:13 [IST]

Source link


Leave a Reply

Your email address will not be published.