பசுவை பலி கொடுக்காதீர்கள்ஜாமியத் உலமா வேண்டுகோள்| Dinamalar


கவுஹாத்தி,-“பக்ரீத் பண்டிகைக்கு முஸ்லிம்கள் பசுவை பலியிடக்கூடாது,” என, முஸ்லிம் அமைப்பான ‘ஜாமியத் உலமா’வின் அசாம் பிரிவு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, ஜாமியத் உலமா அமைப்பின் அசாம் மாநில தலைவர் பதுருதீன் அஜ்மல் வெளியிட்டுள்ள அறிவிப்பு:ஹிந்துக்கள் பசுவை தாய் ஸ்தானத்தில் வைத்து வணங்குகின்றனர் என்பதால் அவர்களின் உணர்வை புண்படுத்தக் கூடாது. எனவே, பக்ரீத் பண்டிகையின் போது, பசுமாட்டை பலியிடுவதை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். ஆடு, எருமை, ஒட்டகம், காளை ஆகியவற்றை பலியிட்டு ‘குர்பானி’ கொடுக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நம் நாட்டில் இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை வரும் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.