அமைச்சர் ரோஜாவை புகைப்படம் எடுத்த 3,000 பேர்!| Dinamalar


திருப்பதி : ஆந்திராவில், ‘இந்தியாஸ் யுனீக்’ சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் நோக்கில், 3,000 புகைப்படக் கலைஞர்கள், அமைச்சர் ரோஜாவை ஒரே நேரத்தில் புகைப்படம் எடுத்த நிகழ்வு நடந்தது.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரபல நடிகை ரோஜா, மாநில விளையாட்டு மற்றும் இளைஞர்மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில், சாதனை படைக்கும் முயற்சியாக, அமைச்சர் ரோஜாவை ஒரே நேரத்தில் 3,000 பேர் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த 3,000 புகைப்படக் கலைஞர்கள், விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் குவிந்தனர். இதையடுத்து, திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ரோஜா ஏறினார். அவரை சுற்றிலும் 3,000 புகைப்படக் கலைஞர்கள் நிற்க வைக்கப்பட்டனர்.

‘ஒன் கிளிக் ஆன் சேம் டைம்’ என்ற அர்த்தத்தில், ஒரே நேரத்தில் 3,000 பேரும் அவரை புகைப்படம் எடுத்தனர். இதற்கான ‘இந்தியாஸ் யுனீக் சாதனை’ சான்றிதழ், ரோஜாவுக்கு வழங்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.