ஆக.,1 முதல் மதுபானங்களுக்கு பற்றாக்குறை.. 468 மதுக்கடைகள் மூடும் சூழல்.. எங்கு தெரியுமா?


புதிய மதுபானக் கொள்கையை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் நாளை ஆகஸ்ட் 1 முதல் மதுபானத்திற்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுக்கொள்கையை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி சில்லறை மதுக்கடைகளை அரசுக்கு பதில் தனியார் நடத்தும் என்றும், அதற்கான உரிமத்தையும் வழங்கி அறிவித்திருந்தது. அதன்படி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே மதுபானங்களை விநியோகிக்க திருத்தப்பட்ட கலால் விதிகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டது.

image
ஆனால் இந்த புதிய மதுக்கொள்கை இந்த நடப்பாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த போதும் இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூலை 31ம் தேதியான இன்றோடு முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில், புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு தற்காலிகமாக கைவிடுவதாகவும், 2022-23ம் ஆண்டுக்கான மதுபானக் கொள்கை வெளியிடும் வரை பழைய கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என டெல்லி மாநில துணை முதலமைச்சரும், கலால்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சில்லறை மதுபானக் கடைகளை டெல்லி அரசே ஏற்று நடத்த இருப்பதால் 468 தனியார் மதுக்கடைகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

image

இது தொடர்பாக பேசியுள்ள மணீஷ் சிசோடியா, “அரசு மூலம் நடத்தப்படும் மதுக்கடைகளில் மட்டுமே விற்பனை செய்வதை உறுதிப்படுத்துமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் எந்த குழப்பமும் இல்லை.

குஜராத்தை போன்று டெல்லியிலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய பாஜகவினர் கலால் அதிகாரிகளை அச்சுறுத்த பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.” எனக் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link


Leave a Reply

Your email address will not be published.