இந்திய பெண்கள் ‘சூப்பர்’ வெற்றி: வீழ்ந்தது பாகிஸ்தான் அணி


பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு ‘டி–20’ லீக் போட்டியில் மந்தனா அரைசதம் விளாச இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் பெண்களுக்கான ‘டி–20’ கிரிக்கெட் அறிமுகமானது. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. இந்திய அணி, தனது 2வது லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. மழையால் தலா 18 ஓவர் போட்டியாக நடந்தது.

 

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பிஸ்மா மரூப் (17), ஒமைமா சோகைல் (10), ஆயிஷா நசீம் (10), அலியா ரியாஸ் (18) நிலைக்கவில்லை. முனீபா அலி (32) ஆறுதல் தந்தார். பாகிஸ்தான் அணி 18 ஓவரில் 99 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் ஸ்னே ராணா, ராதா யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா (16) சுமாரான துவக்கம் தந்தார். அபாரமாக ஆடிய ஸ்மிருதி மந்தனா, சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். துபா ஹசன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய இவர், 31 பந்தில் அரைசதம் கடந்தார். மேக்னா (14) நிலைக்கவில்லை. பாத்திமா சனா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மந்தனா வெற்றியை உறுதி செய்தார்.

 

இந்திய அணி 11.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 102 ரன் எடுத்து முதல் வெற்றி பெற்றது. மந்தனா (63 ரன், 3 சிக்சர், 8 பவுண்டரி), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். கடைசி லீக் போட்டியில் (ஆக. 3) இந்திய அணி, பார்படாசை சந்திக்கிறது.

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.