சித்தராமோற்சவம் விடுதிகள் முன்பதிவு| Dinamalar


தாவணகரே : கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு முன்பே, தங்கும் விடுதிகள் நிரம்பியுள்ளது.ஆகஸ்ட் 3ல், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின், 75வது பிறந்த நாள் விழா சித்தராமோற்சவம்’ என்ற பெயரில் கொண்டாட ஏற்பாடு நடக்கிறது. தாவணகரே புறநகரில், ஷாமனுார் அரண்மனை மைதானத்தின், 50 ஏக்கரில் பெரிய பந்தல் போடப்பட்டுள்ளது.

5 லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.சித்தராமோற்சவம் நிகழ்ச்சியால், தாவணகரே நகர் களை கட்டியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தொண்டர்கள் வருவதால் தங்கும் விடுதிகளில், அறைகள் முன் பதிவாகியுள்ளன. சுற்றுலா பயணியருக்கு, அறைகள் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.