பூஸ்டர் ஊசி போட்டால் சோலா பட்டூரா இலவசம்! பிரதமர் பாராட்டு| Dinamalar


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சண்டிகர்: பஞ்சாபில் உணவகம் நடத்தும் சஞ்சய் ராணா என்பவர், கொரோனாவுக்கு எதிரான ‘பூஸ்டர்’ ஊசி செலுத்திக் கொள்வோருக்கு, இலவசமாக ‘சோலா பட்டூரா’ என்ற உணவு வகையை வழங்கி வருகிறார்.

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில், 15 ஆண்டுகளாக சிறிய உணவகம் நடத்தி வருபவர் சஞ்சய் ராணா. அத்துடன் சைக்கிளில் சோலா பட்டூரா உணவையும் வீதிகளில் விற்பனை செய்து வருகிறார். சோலா பட்டூரா என்பது, கொண்டைக்கடலை மசாலா, பூரி ஆகியவை கலந்த சுவையான உணவு. வட மாநிலங்களில் இது மிகவும் பிரபலம்.

latest tamil news

இவர் கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, புதிய முயற்சியை மேற்கொண்டார். அதன்படி, ‘தடுப்பூசி செலுத்தியோருக்கு, இலவசமாக சோலா பட்டூரா வழங்கப்படும்’ என, அறிவித்தார். இதையடுத்து ஏராளமானோர் தடுப்பூசி போட்ட பின், நேராக சஞ்சய் ராணாவிடம் சான்றைக் காட்டி சுவையான சோலா பட்டூராவை சாப்பிட்டுச் சென்றனர்.

ஏழு மாதங்கள் இலவசமாக சோலா பட்டூரா வழங்கிய சஞ்சய் ராணாவின் புகழ், சமூக வலைதளங்களில் பரவியது. அவரைப் பற்றி பிரதமர் மோடி தன் ‘மன் கீ பாத்’ உரையில் புகழும் அளவிற்கு பிரபலமானார். இந்நிலையில் இரண்டு ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிக்குப் பின், ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு, இலவசமாக சோலா பட்டூரா வழங்கும் திட்டத்தை சஞ்சய் ராணா துவக்கியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.