கார் ஏற்றிக் கொன்ற வாலிபர் கைது| Dinamalar


ஹாசன் : காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை, கார் ஏற்றிக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் ஹாசனின் அரசிகரே அருகே உள்ள ஹெஞ்சுகொண்டனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா, 22. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரை பொம்மநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பரத், 25 என்பவர் ஒரு தலையாக காதலித்தார். தன் காதலை ஏற்கும்படி பல முறை வற்புறுத்தி உள்ளார். அதற்கு, அப்பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார். இதனால், அப்பெண்ணை கொல்ல முடிவு செய்தார்.

கடந்த 4ம் தேதி மைசூரில் இருந்து வாடகை கார் எடுத்து, ஹாசன் வந்தார். ஹாசன் அருகே உள்ள பூவனஹள்ளி என்ற இடத்தில், அப்பெண் வேலைக்கு நடந்து சென்றபோது அவர் மீது காரால் மோதினார். இதை தொடர்ந்து ஒரு சரக்கு ஆட்டோ, இரண்டு இரு சக்கர வாகனம் மீதும் கார் மோதியது. விபத்துக்கு பின் வாலிபர் தப்பி சென்றார்.

படுகாயம் அடைந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர் விபத்து என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர், திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து தீவிரமாக விசாரித்த போலீசார், தலைமறைவாக இருந்த பரத்தை, நேற்று சொந்த ஊரில் கைது செய்தனர். அவரிடம் ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை நடத்தினர். இதில், காரை ஏற்றி கொலை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.