"குஜராத் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆரத்தியுடன் வரவேற்பா?" கொதித்த நடிகர் பிரகாஷ் ராஜ்


குஜராத்தில் 2002-ம் ஆண்டில் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதில் பல மக்கள் உயிரிழந்தனர். குறிப்பாக இஸ்லாமியர்கள் பலர் உயிரிழந்தனர். 2,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த வன்முறைச் சம்பவத்தில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரின் குடும்பத்தார் ஏழு பேரைக் கொலை செய்த வழக்கில் 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், தண்டனைக் காலம் முடியும் முன்பே, இவர்கள் குஜராத் அரசால் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் சிறையிலிருந்து விடுதலை அடைந்தவர்களுக்கு மாலை மரியாதை என்று ஆரத்தி எடுத்து வரவேற்ற சம்பவம் நாடுமுழுவதும் பேசுபொருளாகி வருகிறது. இது குறித்து பலரும் தங்களின் கருத்துக்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னணி நடிகரான பிரகாஷ் ராஜ் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் “பெருந்தலைவர் (மோடியைக் குறிப்பிட்டு) தங்கப்பதக்கம் வென்றவர்களை வாழ்த்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். அவரின் ஆதரவாளர்களோ பாலியல் குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வாழ்த்தி வருகின்றனர். இதுதான் உங்களின் Amrit Kaal-ஆ?” என்று விமர்சனம் செய்துள்ளார்.

Source link


Leave a Reply

Your email address will not be published.