திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் பத்திரிகையாளர் – கொலைசெய்து வெட்டி துண்டுகளாக்கிய நிரூபர்


தன்னை திருமணம் செய்யவேண்டுமானால் இந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்ற காதலிமீது ஆத்திரமடைந்த பத்திரிகையாளர் அவரை கொலைசெய்து உடலை துண்டுகளாக்கியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஔரங்காபாத் மாவட்டத்தில் ஷியுர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 24 வயதான பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. கணவரை பிரிந்துவாழும் இவர் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு ஃப்ரீலான்ஸ் நிருபரான சரூப் லாகே(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு அடிக்கடி அவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். மேலும் அவரை திருமணம் செய்துகொள்வதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

image

உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில்ஆத்திரமடைந்த லாகே ஆகஸ்ட் 15ஆம் தேதி அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். மேலும் அந்த கொலையை மறைக்க அந்த பெண்ணின் உடலை துண்டுகளாக வெட்டியுள்ளார். அடுத்த நாள் அந்த தலை மற்றும் கைகளை ஷியுரிலுள்ள ஒரு கிடங்கில் கொண்டுசென்று வைத்துள்ளார். மறுநாள் உடலின் மற்ற பகுதிகளை அவர் கொண்டுசென்றதை கவனித்த வீட்டின் உரிமையாளர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை கைதுசெய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link


Leave a Reply

Your email address will not be published.