`நான் காதலிக்கும் ஒரே ஆள் நான்தான்’ தன்னைத் தானே திருமணம் செய்த `என் கணவன் என் தோழன்’ சீரியல் நடிகை |Kanishka Soni of Diya Aur Baati Hum fame marries herself


நடிகை கனிஷ்கா சோனி

நடிகை கனிஷ்கா சோனி

தற்போது இவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு கழுத்தில் தாலியும், நெற்றியில் குங்குமமும் வைத்திருந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துக்கொண்டார். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பேசிய அவர், “நான் சுயநினைவுடன்தான் இந்த முடிவை எடுத்தேன். நான் காதலிக்கும் ஒரே நபர் நான்தான். எனக்கு யாரும் தேவையில்லை. தனிமையில் இருக்குபோது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன், என்று கூறிய அவர் மேலும் நான் தெய்வம், சிவன் மற்றும் சக்தி எல்லாம் என்னுள் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இதனிடையே, நியூயார்க்கில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய கனிஷ்கா இணையத்தில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அதில், தன்னைத் தானே திருமணம் செய்துக்கொண்டதுக் குறித்து பலரும் அவருக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து வருவதாகவும், இந்திய கலாசாரத்தை அவர் அவமதிப்பதாக அனைவரும் கூறுவதாக அவர் பேசியிருக்கிறார். மேலும் அவர், தான் நினைத்தப்படி எந்த ஒரு ஆண்ணையும் தன் வாழ்நாளில் இதுவரை சந்திக்கவில்லை. அதனால்தான் தனியாக இருக்க முடிவு செய்தேன் என்றும் பகிர்ந்துக் கொண்டார். திருமணம் என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அதில் காதலும், நேர்மையும் இருக்க வேண்டும். இப்போது அப்படி யாரும் இருப்பதாக எனக்கு நம்பிக்கை இல்லை.


Leave a Reply

Your email address will not be published.