“லண்டனில் வெங்கட் பிரபு நைட் ஷிஃப்ட் வேலை செய்து எங்களை கவனித்துக் கொண்டார்!” – நெகிழும் வைபவ் | Actor Vaibhav talks about his friendship with Venkat Prabhu, Premji and Yuvan Shankar Raja


“நான் படிச்சது, வளர்ந்தது சென்னையில்தான். சாந்தோம்ல செயின்ட் பீடர்ஸ்லதான் படிச்சேன். மகேஷ் பாபு என் ஸ்கூல் மேட். எனக்கு ஒரு வருஷம் சீனியர் அவர். வெங்கட் பிரபுவும், கார்த்தியுமே எனக்கு சீனியர்ஸ். யுவனும், பிரேம்ஜியும் என் கிளாஸ்மேட்ஸ். ஸ்கூல்ல நடக்கற கல்ச்சுரல்ஸ்ல நானும் யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கோம். அப்ப தி.நகர்ல இருந்த எங்க வீட்டுல இருந்து, சாந்தோமுக்குத் தினமும் 12பி பஸ்லதான் போயிட்டு வருவேன். என் வீட்டுல இருந்து ரெண்டு வீடு தள்ளி யுவன் வீடு இருந்துச்சு. அவர் கார்ல வருவார். கார்ல என்னை வீட்டுல டிராப் பண்றதுக்காகவே யுவனை ஃப்ரெண்ட் புடிச்சிக்கிட்டேன்.

அதே மாதிரி அவனும் என்னை டிராப் பண்ணுவான். யுவன்கிட்ட நிறைய விஷயங்கள் பிடிக்கும். அப்ப எக்கோ ஆடியோ கேசட் இருந்துச்சு. இளையராஜா சாரோட பாடல்கள் எல்லாம் அந்த கேசட்லதான் வரும். அது யுவன் வீட்டுல டப்பா டப்பாவா நிறைய குவிஞ்சிருக்கும். எக்கோ கேசட்ல புதுப்படப் பாடல் வெளியாகறப்ப முதல் கேசட்டை எனக்குக் கொடுப்பான். ஒண்ணு ரெண்டுதான் கொடுப்பான். நான், அப்படியே பத்து, பதினைஞ்சு கேசட்டுகளை அள்ளிடுவேன். ஒருகட்டத்துல நான் யுவன் வீட்டுக்குப் போனாலே, கேசட் டப்பாக்களை எடுத்து ஒளிச்சு வச்சிடுவான். இந்த மாதிரி நிறைய சாதனைகள், மெமரீஸ் இருக்கு!


Leave a Reply

Your email address will not be published.