“நான்கூட சிறுவயதில் ராணுவத்தில் சேர விரும்பினேன்; ஆனால்..!” – மனம் திறந்த ராஜ்நாத் சிங் | Union minister Rajnath singh reveals his child age dream about military ambition


நம்மில் பல பேர் சிறுவயதில், நான் இப்படி ஆகவேண்டும், மக்களுக்கு பல்வேறு சேவை செய்யவேண்டும் என பல கனவுகள் கண்டிருப்போம். அதில் பலபேர் நிச்சயம் ராணுவத்தில் சேர்ந்து நாட்டை பாதுகாக்க சேவை செய்ய வேண்டும் என்று நினைத்திருப்பார்கள். பலருக்கு அந்த ஆசை நிறைவேறியும் இருக்கும். இன்னும் பலருக்கு காலப்போக்கில், சில சூழ்நிலைகள் காரணமாக வெறும் கனவாகவே போயிருக்கும். அப்படி கனவு வெறும் கனவாகவே போன நிகழ்வு நம் நாட்டின் மத்திய அமைச்சருக்குமே நிகழ்ந்திருக்கிறது.

அதாவது, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், சிறுவயதில், தான் ராணுவத்தில் சேர நினைத்ததையும், பின்னர் எதனால் அது நிறைவேறாமல் போனது என்பது பற்றியும் தன் மௌனத்தை தற்போது கலைத்திருக்கிறார். மணிப்பூர் மாநிலத்துக்கு இரண்டு நாள்கள் பயணம் மேற்கொண்டிருக்கும் ராஜ்நாத் சிங், இம்பால் நகரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் மற்றும் இந்திய ராணுவத்தின் 57-வது மலைப் பிரிவு வீரர்களிடம் இன்று உரையாற்றினார்.

ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

அப்போது தன்னுடைய சிறுவயது ராணுவ கனவு குறித்துப் பேசிய ராஜ்நாத் சிங், “என்னுடைய சிறுவயதிலிருந்து ஒரு கதையை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சிறுவயதில் நானும் ராணுவத்தில் சேர விரும்பினேன். அதற்காக ஒருமுறை, குறுகிய சேவை ஆணையத்தின் தேர்வில்கூட நான் கலந்துகொண்டேன். மேலும், எழுத்துத் தேர்வையும் நான் முடித்திருந்தேன். ஆனால், என் தந்தை இறந்த பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் ராணுவத்தில் சேரமுடியவில்லை.

ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

ராணுவ சீருடையில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. ஒரு குழந்தையிடம் நீங்கள் ராணுவ சீருடையைக் கொடுத்தால், அவர்களுடைய ஆளுமை மாறுவதை நீங்கள் பார்ப்பீர்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் பட்டயக் கணக்காளர்கள் போன்றோர்கள் ஏதோ ஒரு வகையில் நாட்டுக்குப் சேவை செய்கிறார்கள் என்றாலும்கூட, உங்களின் சேவை மற்ற சேவைகளைவிடவும் மேலானது என்று நான் நம்புகிறேன்” என ராணுவ வீரர்களிடையே கூறினார்.

Source link


Leave a Reply

Your email address will not be published.