வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-பள்ளிக்கு நேரடியாக போகாமலே, ‘ஆன்லைன்’ வாயிலாக படிக்கும், ‘விர்ச்சுவல்’ பள்ளியை புதுடில்லி அரசு துவக்கியுள்ளது. இதில், நாட்டின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் சேரலாம்.

புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு பள்ளிகளுக்கு செல்லாமலேயே, விர்ச்சுவல் முறையில் படிக்கும் பள்ளியை முதல்வர் கெஜ்ரிவால் நேற்று துவக்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் படித்தனர். அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த பள்ளி துவக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள், இந்த விர்ச்சுவல் பள்ளியில் சேரலாம்.நாட்டின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவரும் இதில் படிக்க முடியும்.

இந்தப் பள்ளியில், 9 – பிளஸ் 2 வகுப்பு வரை நடத்தப்படும். நாட்டிலேயே முதல் விர்ச்சுவல் பள்ளியை துவக்கியுள்ளோம். மாநில கல்வி வாரியத்தின் வாயிலாக தேர்வுகள் நடத்தப்படும்.இதில் சேரும் மாணவர்களுக்கு, ‘நீட், க்யூட், ஜே.இ.இ.,’ உள்ளிட்ட உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்பதற்கான பயிற்சியும் அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement