பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா… கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்


ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி பாராட்டு மழையில் நனைகிறது. நாடு முழுவதும் ரசிகர்கள் ஆடிப்பாடி வெற்றியைக் கொண்டாடினர்.
   
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. இதன் மூலம், கடந்த ஆண்டு டி20 உலக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்திய அணியின் வெற்றிக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

image

இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.  ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி,  பாகிஸ்தானை வென்றதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரிய திரைகளில் கிரிக்கெட் போட்டியை பார்த்தவர்கள், இந்திய அணி வெற்றி பெற்றதும், மகிழ்ச்சியில் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். டெல்லி, மும்பை, நாக்பூர், கான்பூர், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரசிகர்கள் ஆடிப், பாடி இந்திய அணியின் வெற்றியை கொண்டாடினர்.

இதையும் படிக்க: ‘நான் பார்த்துக்கிறேன்’ – அசால்ட் செய்த ஹர்திக் பாண்டியா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link


Leave a Reply

Your email address will not be published.