
பூம் படத்தில் கவர்ச்சி பாம்
இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பூம்.’ இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கத்ரீனா கைஃப், பாலிவுட்டின் கவர்ச்சிப் புயலாக கலக்குவார் என அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. முதல் படத்திலேயே அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெராப் என லெஜண்ட் நடிகர்களுடன் மாஸ் காட்டிய கத்ரினா கைஃப், அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆனார்.

முன்னணி ஹீரோக்களுடன் டூயட்
இந்தியைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் படங்களிலும் கத்ரீனா கைஃப் தனது கவர்ச்சியான நடிப்பால் பிரபலமானார். குறுகிய காலத்திலேயே பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கான், அபிஷேக் பச்சன், அக்சய் குமார், ஷஃயிப் அலிகான் ஆகியோருடன் ஜோடி சேர்ந்த கத்ரீனா கைஃப், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கிறார்.

விக்கி கெஷலுடன் திருமணம்
நடிப்பில் பிஸியாக வலம்வந்த கத்ரீனா கைஃப், சில வருடங்களாக விக்கி கெளஷலுடன் காதலிலும் சிறகடித்து பறந்துவந்தார். இதனையடுத்து இருவரும் கடந்தாண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர். 2012ல் அறிமுகமான விக்கி கெஷலும், பாம்வே வெல்வட், ஜுபான், ராமன் ராகவ் 2.O, ராஷி, லஸ்ட் ஸ்டோரிஸ், உரி – தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், சர்தார் உதம் போன்ற படங்களில் நடித்து பிரபலமாகியிருந்தார். கத்ரினா கைஃப் தன்னைவிட 5வயது குறைவான விக்கி கெஷலை திருமணம் செய்துகொண்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

மனம் திறந்த கத்ரினா கைஃப்
இந்நிலையில், திருமண வாழ்க்கை குறித்து கத்ரீனா கைஃப் தற்போது மனம் திறந்துள்ளார். .அதில், திருமணத்திற்கு பின்னர் தான் நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுளார். நட்சத்திர ஜோடிகளான கத்ரீனா கைஃப், விக்கி கெஷல் திருமணத்திற்கு, அதிகமான பேருக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது அதுகுறித்தும் விளக்கம் கொடுத்துள்ளார். “திருமணத்திற்கு பலரையும் அழைக்காததற்கு காரணம் கொரோனா தான் என்றும், திருமணம் நெருங்கிய சமயத்தில் தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா ஏற்பட்டு விட்டதால், பாதுகாப்பு கருதியே திருமணத்தை பிரமாண்டமாக நடத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.