'சூர்யா 42' சூட்டிங் புகைப்படங்களை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை – தயாரிப்பு நிறுவனம்


சூர்யாவின் 42வது படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களாக இந்தப் படம் சார்ந்த படப்பிடிப்பு தளத்தின் வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக படக்குழுவை சார்ந்தவர்களே படப்பிடிப்பு தளம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்தனர்.

Suriya 42: Suriya starts shooting for his next with director Siva, asks for  fans' blessings | Entertainment News,The Indian Express

இந்த சூழலில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் ஒரு அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில் “நாங்கள் சூர்யா42 சார்ந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பார்க்க நேர்ந்தது. எந்த ஒரு உழைப்பும் இரத்தமும் வேர்வையும் சிந்தி ஒரு குழுவால் உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தை மிகச்சிறந்த திரை அனுபவமாக உங்களுக்கு அளிக்க விரும்புகிறோம். எனவே இந்தப் படம் சார்ந்த வீடியோ, புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்ந்திருந்தால் அதை உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இது போன்றவற்றை இனி பகிர்ந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என அறிவித்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன்.

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Please Don't Share Any Shooting Spot Videos and Photos about <a href=”https://twitter.com/hashtag/Suriya42?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#Suriya42</a> <a href=”https://t.co/idnGu4VXvz”>pic.twitter.com/idnGu4VXvz</a></p>&mdash; Studio Green (@StudioGreen2) <a href=”https://twitter.com/StudioGreen2/status/1574059935230722048?ref_src=twsrc%5Etfw”>September 25, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

‘சூர்யா42’ தமிழ் உட்பட 10 மொழிகளிலும், 3டி தொழில்நுட்பத்திலும் உருவாக்கப்படுகிறது. சரித்திரப் படமாக உருவாகும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

– ஜான்சன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


Leave a Reply

Your email address will not be published.