நாடு முழுவதும் கோலாகலமாக தொடங்கிய நவராத்திரி விழா.!


நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.

நவராத்திரியின் முதல் நாளையொட்டி வடமாநிலங்களின் பல்வேறு கோயில்களிலும், பக்தர்கள் சிறப்பு பூஜைகளுடன் வழிபாட்டில் ஈடுபட்டனர். இன்று தொடங்கியுள்ள நவராத்திரி பண்டிகை, அக்டோபர் 5 ஆம் தேதி வரையில் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

image

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜந்தேவலன் கோயிலில், அம்மன் சிலைக்கு மலர்கள் மற்றும் ஆபரணங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பே கவுரி ஆரத்தி எனும் சிறப்பு தீபாராதனையும் செய்யப்பட்டது.

image

இதே போல மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மும்பா தேவி கோயிலில் அதிகாலையிலேயே சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் நவராத்திரி விழாவின் தொடக்கமாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link


Leave a Reply

Your email address will not be published.