இது உங்கள் இடம்: உண்மையை போட்டுடைத்த ஆர்.எஸ்.பாரதி| Dinamalar


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:…

ன்.மல்லிகை மன்னன், மதுரையில்இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:

‘தி.மு.க.,வில் உழைப்பவர்களுக்கு, உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை; உழைக்காதவர்கள் தான் பதவியில் இருக்கின்றனர்’ என்று, தன் வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார், அக்கட்சியின் அமைப்புச் செயலர், ஆர்.எஸ்.பாரதி. கட்சியில் பதவி சுகம் அனுபவித்தவர்கள், எமர்ஜென்சி காலத்தில் கருணாநிதியை விட்டு விலகிப் போய் விட்டனர்; தான் மட்டுமே, அவரோடு இருந்ததாகவும் கூறியுள்ளார்.

latest tamil news

அதுமட்டுமின்றி, கட்சி என்று வந்து விட்டால், பதவி கிடைக்கிறதோ இல்லையோ, இறுதி நாள் வரை கட்சியில் இருப்பவர் தான் உண்மையான, விசுவாசமான தொண்டர் என்றும், வியாக்கியானம் வேறு பேசியிருக்கிறார்.

அரசியல்வாதிகளுக்கு, மானம், வெட்கம், சூடு சொரணை என எதுவும் இருக்கக்கூடாது என்று, இலக்கணம் வகுத்தவர், டி.ஆர். பாலு; அதனால் தான், எம்.பி., மத்திய அமைச்சர், கட்சியின் பொருளாளர் என, பல பதவிகளை அவரால் வகிக்க முடிந்துள்ளது.

‘தி.மு.க.,வில் உண்மையாக உழைப்பவர்களுக்கு, மதிப்பு, மரியாதை இல்லை’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையோ, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியோ கருத்து தெரிவித்திருந்தால், இந்த உத்தம சிகாமணிகளின், ‘ரியாக் ஷனே’ வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

தி.மு.க., பட்டி தொட்டி எங்கும் வளர அரும்பாடுபட்ட எம்.ஜி.ஆரையே, கணக்கு கேட்டதற்காக துாக்கி வீசியவர் கருணாநிதி.

latest tamil news

தி.மு.க.,வில் என்றைக்கு வாரிசு அரசியல் உருவானதோ, அன்றைக்கே உண்மையான விசுவாசிகளுக்கு மதிப்பு மரியாதை குறைந்து, பதவியும் கிடைக்காமல் போனது தான் உண்மை. காலம் தாழ்ந்து இதை உணர்ந்திருக்கிறார், ஆர்.எஸ். பாரதி… பாவம்!

எது எப்படியோ கட்சி மேலிடத்தின் தவறை துணிச்சலாக, வெளி உலகத்திற்கு சொல்லியிருக்கிறார். இவருக்கு ஸ்டாலின் என்ன, ‘பரிசு’ கொடுக்கப் போகிறார் என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link


Leave a Reply

Your email address will not be published.