“கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2,900-க்கும் மேற்பட்ட மதக் கலவர வழக்குகள்” – மத்திய அமைச்சர் தகவல் | Over 2900 communal violence cases registered in country in last 5 years, union minister nityanand rai


இந்த ஆண்டின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிசம்பர் 7) தொடங்கி வரும் 29-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. அதன்படி, இன்று முதல்நாள் கூட்டத்தொடர் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, இளம் எம்.பி-க்கள் விவாதங்கள் மற்றும் சட்டமியற்றுவதில் பங்கேற்க விரும்புவதாகவும், அவர்களுக்கு மற்ற தலைவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

அதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தொடரில், ஜெபி மாதர் ஹிஷாம்கொலைச் சம்பவங்களை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பு, நிவாரணம் மற்றும் அதன் மீதான தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில வாரியாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளனவா என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கேள்வி எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து, அவர் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கிய குற்றத் தரவுகளை வெளியிடுகிறது.

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யாநந்த் ராய்

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யாநந்த் ராய்

அதன்படி 2017 முதல் 2021 வரையிலான காலகட்டங்களில் சுமார் 2,900-க்கும் மேற்பட்ட வகுப்புவாத அல்லது மதக் கலவர வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அதாவது, 2017-ல் 723 வழக்குகள், 2018-ல் 512 வழக்குகள், 2019-ல் 438 வழக்குகள், 2020-ல் 857 வழக்குகள், 2021-ல் 378 வழக்குகள் என மொத்தம் 2,908 மதக் கலவர வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன” என்று தெரிவித்தார்.

மேலும் ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 123 பயங்கரவாத சம்பவங்கள் நடந்திருப்பதாக தெரிவித்த நித்யானந்த் ராய், அதில் 31 பாதுகாப்பு படை வீரர்கள், 31 பொதுமக்கள் உயிரிழந்தனர் என்றும், 180 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றும் கூறினார்.

Source link


Leave a Reply

Your email address will not be published.