வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா-குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது வங்காளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதற்காக, ‘பாலிவுட்’ நடிகர் பரேஷ் ராவலுக்கு, கோல்கட்டா போலீசார் ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்.
![]() |
‘பாலிவுட்’ நடிகரும், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,யுமான பரேஷ் ராவல், குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.,வுக்கு ஆதரவாக வல்சத் மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகமாக உள்ளது. ஆனால் அது குறைந்துவிடும்.
வேலையில்லா திண்டாட்டம் கூட தீர்ந்துவிடும். ஆனால், புதுடில்லியில் இருப்பதை போல, புலம்பெயர்ந்த ரோஹிங்யா முஸ்லிம்களும், வங்கதேசத்தினரும் உங்களுடன் சேர்ந்து வசிக்க துவங்கினால் என்னவாகும்?
![]() |
அந்த சமையல் எரிவாயு சிலிண்டரை வைத்து வங்காளிகளுக்கு மீன் சமைத்து தருவீர்களா?
இவ்வாறு பரேஷ் ராவல் கிண்டலாக பேசினார்.
‘இது வங்காளிகளை இழிவுபடுத்துவதாக உள்ளது’ என, மேற்கு வங்கத்தின் மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில தலைவர் முகமது சலீம் கோல்கட்டா போலீசில் புகார் அளித்தார்.
பரேஷ் ராவத் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement