அமெரிக்க ஊடக நிறுவனமான ஃபோர்ப்ஸ் (Forbes), உலகம் முழுவதுமுள்ள டாப் பில்லியனர்கள், மில்லியனர்கள், வளர்ந்து வரும் பணக்காரர்களின் பட்டியலை அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆசியாவின் சமூக தொண்டுக்கான 16 – வது பதிப்பு பட்டியலை, டிசம்பர் 6-ஆம் தேதி செவ்வாய்க் கிழமையன்று வெளியிட்டது.
அதில் கவுதம் அதானி, ஷிவ் நாடார், அஷோக் சூடா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி ரூ. 60,000 கோடிக்கு சமூக நலப்பணிகளுக்குச் செலவிடுவதாக உறுதி அளித்ததற்காக இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 1996 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அதானி அறக்கட்டளை இந்த பணத்தைச் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு அளித்து உதவும் என்று தெரிவிக்கப்படுகிறது.