குஜராத்தில் பா.ஜ., முன்னிலை; ஹிமாச்சலில் இழுபறி ?| Dinamalar


புதுடில்லி: குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று(டிச.,08) 8 மணிக்கு துவங்கி நடை பெற்று வருகிறது. இரண்டிலும் பா.ஜ., முன்னிலை பெற்றுள்ளது. குஜராத்தில் 125 தொகுதிகளுக்கும் மேல் பா.ஜ., முன்னிலை பெற்றுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் பா.ஜ., வும் காங்கிரசும் மிக சொற்றப வித்தியாசத்தில் முன்னிலையில் சென்று கொண்டிருக்கிறது.

latest tamil news

குஜராத்

குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 182 தொகுதிகள் உள்ள சட்டசபைக்கு, கடந்த 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், 64.33 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கடந்த 2017 லோக்சபா தேர்தலில், 68..39 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இங்கு வழக்கமாக பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கும். இந்த முறை, புதுடில்லி மற்றும் பஞ்சாபில் ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மியும் களமிறங்கியது. இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ.,வுக்கு சாதகமாகவே உள்ளன. இந்தக் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான, 92 தொகுதிகளை விட அதிக தொகுதிகளில் வெல்லும் என, கருத்துக் கணிப்பில் கூறினர். இந்நிலையில் ஓட்டுகளை எண்ணிக்கை இன்று(டிச.,08) 8 மணிக்கு துவங்கி நடை பெற்று வருகிறது. இந்த ஓட்டு எண்ணிக்கையில் அதிக இடங்களை பாஜ., பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

latest tamil news

ஹிமாச்சலப் பிரதேசம்:

ஹிமாச்சலப் பிரதேசத்தில், 68 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இங்கும் இன்று ஓட்டு எண்ணிக்கை இன்று நடை பெற்று வருகிறது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே மிகவும் குறைந்த சீட்களே வித்தியாசமாக இருக்கும் என தெரிவிக்கின்றன. இதனால், ஆட்சி மாற்றம் ஏற்படுமா அல்லது மாறி மாறி கட்சிகள் ஆட்சிக்கு வரும் பாரம்பரியம் மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தல் வெற்றி

குஜராத்தில் பா.ஜ., 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் 77 தொகுதிகளையும் கைப்பற்றியது. ஹிமாச்சலில் இழுபறி ஏற்பட்டால் சுயேச்சைகளை வளைப்பதற்காக, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் ஏற்கனவே திட்டங்களை வகுத்துள்ளன.கடந்த 2௦17 தேர்தலில், பா.ஜ., 44ல் வென்றது. காங்கிரஸ், 21ல் வென்றது. ஒரு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வென்றது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link


Leave a Reply

Your email address will not be published.