புதுடில்லி,-தற்போது பா.ஜ., வசம் உள்ள குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதையடுத்து, ஆட்சியைப் பிடிக்க களமிறங்கியுள்ள கட்சிகள் ‘டென்ஷனில்’ உள்ளன.
![]() |
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 182 தொகுதிகள் உள்ள சட்டசபைக்கு, கடந்த 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலில், 64.33 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கடந்த 2017 லோக்சபா தேர்தலில், 68..39 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
ஏழு முறை வெற்றி
கடந்த ௨௦௧௭ தேர்தலில் பா.ஜ., 99ல் வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் ௭௭ இடங்களிலும், பாரதிய பழங்குடியின கட்சி இரண்டு இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றன. மூன்று தொகுதிகளில் சுயேச்சைகள் வென்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரசில் இருந்து பல எம்.எல்.ஏ.,க் கள் விலகி பா.ஜ.,வில் இணைந்தனர். தற்போதைய தேர்தலுக்கு முன் சட்டசபையில் பா.ஜ., வின் பலம், ௧௧௦ ஆகவும், காங்கிரசின் பலம், ௬௦ஆகவும் இருந்தன.
குஜராத், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால், இங்கு வெற்றி பெறுவதை கவுரவப் பிரச்னையாக கருதி பா.ஜ., தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது.
மேற்கு வங்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஏழு முறை வென்றதே இதுவரை சாதனையாகும்.
கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜ., இந்த சாதனையை சமன் செய்ய தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. பிரதமர் மோடி, ௩௦க்கும் மேற்பட்ட பிரசார கூட்டங்களில் பங்கேற்றார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கும் இது சொந்த மாநிலம். இதனால், அவரும் அங்கு முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டார். கட்சித் தலைவர் நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் இங்கு பிரசாரம் செய்தனர்.
பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களான யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சவுகான், ஹிமந்த பிஸ்வா சர்மா, பிரமோத் சாவந்த் ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இங்கு வழக்கமாக பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கும். இந்த முறை, புதுடில்லி மற்றும் பஞ்சாபில் ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மியும் களமிறங்கியது.
இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டது. புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பாரத ஒற்றுமை யாத்திரையில் உள்ளதால், அவர் இரண்டு கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றார்.
அக்கட்சியின் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அதிக பிரசார கூட்டங்களில் பங்கேற்றார். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சில கூட்டங்களில் பங்கேற்றார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ.,வுக்கு சாதகமாகவே உள்ளன. இந்தக் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான, ௯௨ தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் வெல்லும் என, கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கருத்து கணிப்புகள்
இதன்படி, பா.ஜ.,வுக்கு ௧௧௭ – ௧௫௧ இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் ௧௬ – ௫௧இடங்களில் வெல்லும். ஆம் ஆத்மி 2 – 13 இடங்களில் வெல்லலாம் என கணிப்புகள் கூறுகின்றன.
இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. மாநிலம் முழுதும், ௩௭ மையங்களில் காலை ௮:௦௦ மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.
![]() |
குஜராத் சட்டசபை தேர்தலில், ௧,௬௨௧ பேர் போட்டியிட்டனர். இதில், ௬௨௪ பேர் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளனர். மற்றவர்கள், ௭௦ அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
ஓட்டு எண்ணிக்கை இன்று நடப்பதால், ஆட்சியைப் பிடிக்க களமிறங்கியுள்ள கட்சிகள் டென்ஷனில் உள்ளன.
மாற்றம் தருமா ஹிமாச்சல்!
ஹிமாச்சலப் பிரதேசத்தில், ௬௮ சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் ௧௨ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இங்கும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.கடந்த ௧௯௮௫க்குப் பின், ஹிமாச்சலில் எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை வென்றதில்லை. இந்த பாரம்பரியத்தை மாற்றும்படி, பா.ஜ., சார்பில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே மிகவும் குறைந்த சீட்களே வித்தியாசமாக இருக்கும் என தெரிவிக்கின்றன.இதனால், ஆட்சி மாற்றம் ஏற்படுமா அல்லது மாறி மாறி கட்சிகள் ஆட்சிக்கு வரும் பாரம்பரியம் மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இழுபறி ஏற்பட்டால் சுயேச்சைகளை வளைப்பதற்காக, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் ஏற்கனவே திட்டங்களை வகுத்துள்ளன.கடந்த ௨௦௧௭ தேர்தலில், பா.ஜ., ௪௪ல் வென்றது. காங்கிரஸ், ௨௧ல் வென்றது. ஒரு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வென்றது. இரண்டு தொகுதிகள் சுயேச்சை வசம் சென்றன. இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில், இங்குள்ள அரசியல் கட்சிகள் பெரும் பரபரப்பில் உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்