மின்சார போக்குவரத்துக்கு ஹிந்துஜா டெக் அடித்தளம்| Dinamalar


சென்னை–‘ஹிந்துஜா டெக்’ நிறுவனம், ‘டிரைவ் சிஸ்டம் டிசைன்’ என்ற பொறியியல் ஆலோசனை நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது. அதிநவீன இன்ஜினியரிங் சேவைகளை வழங்கும் டிரைவ் சிஸ்டம் டிசைன் நிறுவனம், வாகனத் துறை, பாதுகாப்புத்துறை, விமான போக்குவரத்து துறை என, பல துறைகளுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது.

ஹிந்துஜா டெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரபாஸ் கூறியதாவது:

டிரைவ் சிஸ்டம் டிசைன் நிறுவனத்தை கையகப்படுத்தியது, மின்சார வாகன துறையில் ஹிந்துஜா டெக் நிறுவனத்தின் வளர்ச்சி பயணத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்.

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், எதிர்கால ‘பவர் டிரைன்’ அமைப்புகளில் கவனம் செலுத்தி வருகிறது. அதனால், மின்சார வாகன போக்குவரத்துக்கு மாறும் முயற்சியை, இந்த நிறுவனம் முன்னெடுத்துச் செல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.