பலியா:உத்தரப் பிரதேசத்தில் புலி தாக்கியதில் இரண்டு இளைஞர்கள் காயம் அடைந்தனர்.
உ.பி., மாநிலம் பலியா மாவட்டம் கட்வார் அருகே ஹஜவுலி என்ற கிராமத்தில், நேற்று முன் தினம் மாலை, வனப்பகுதிக்கு அருகேயுள்ள குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பின்பக்கமாக வந்த புலி இரண்டு பேர் மீதும் பாய்ந்தது.
சுதாரித்த இளைஞர்கள் அதனுடன் போராடி தப்பி வந்தனர். ஆனால், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வனத்துறை மற்றும் போலீஸ் இணைந்து புலியை பிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது
