இன்று பலரும் முதுகு வலி பிரச்னை பற்றி கூறுவதை கேட்கிறோம். குறிப்பாக கீழ் முதுகுவலி (Low back pain) என்பது உட்கார்ந்த இடத்திலேயே பணி புரிபவர்களுக்கும், அதிக நேரம் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கும் அதிகமாக இருக்கும். கீழ் முதுகில் ஏற்படும் இந்த வலியானது சில சமயங்களில் அதிகமாகவும், தாங்க முடியாததாகவும் மாறிவிடும் வாய்ப்புண்டு. சில உடற்பயிற்கிகள் செய்யும்பட்சத்தில், இந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம் என்கிறார், ஸ்போர்ட்ஸ் ஃபிசியோதெரபிஸ்ட் ராகுல். அவர் தரும் வழிகாட்டல் இங்கே…

படத்தில் உள்ளது போல Leg Shoulder With Half Squat நிலையில் நின்று, abs-ஐ டைட் செய்து ரிலீஸ் செய்யவும். இதை தொடர்ந்து செய்யும்போது கீழ் முதுகில் உள்ள ஜாயின்ட்கள் ரிலீஸ் ஆகும். இதை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, 15 முறை செய்யலாம். இதன்மூலம் முதுகுத்தண்டும் இடுப்பு எலும்பும் ரிலீஸ் ஆகும்.