கீர்த்தியும் அந்த நண்பரும் பத்தாண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருவதாகவும் இவர்களின் காதலுக்கும் இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து விட்டனர் என்றும் வெளியான அந்தச் செய்தி, ‘அதேநேரம் திருமணம் சில ஆண்டுகள் கழித்தே நடக்கும்’ என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்தத் தகவல் குறித்து மேற்கொண்டு அறிய கீர்த்தியின் அம்மா மேனகா சுரேஷைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
”முழுக்க முழுக்கப் பொய்யான, பரபரப்புக்காகக் கிளப்பி விடப்பட்டிருக்கிற செய்திங்க அது. இந்த மாதிரி வெளியாகிற எந்தச் செய்தியையும் பார்க்கக் கூட நாங்க விரும்பறதில்லை. கீர்த்தியின் திருமணம் தொடர்பான சோஷியல் மீடியா தீனிக்கு எங்களுடைய பதில் இதுதான், மேற்கொண்டு இது தொடரபா பேசுவதற்கு எதுவுமே இல்லை” என முடித்துக் கொண்டார் அவர்.