ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அதில் ஆம் ஆத்மியின் பல முக்கிய அமைச்சர்கள் கைதாகி இருக்கின்றனர். இந்த நிலையில், டெல்லியில் எதிர்க்கட்சியாகச் செயல்படும் பா.ஜ.க, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்போவதாகத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான ராம்வீர் சிங் பிதுரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆம் ஆத்மி அரசுக்கு பதவியில் இருக்க தார்மீக அல்லது அரசியலமைப்பு உரிமை இல்லை. ஆளும் அரசின் இரண்டு அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, சிறையில் இருக்கின்றனர். எனவே, ஊழல் குறித்தும், முக்கியப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடர் ஐந்து நாள்களுக்கும், அதில் கேள்வி நேரம் இரண்டு நாள்களுக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, நிறைய பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் வகையில் பட்ஜெட் கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.