மதுரை: வசந்தராயர் மண்டபத்தில் புதிய தூண்கள் நிறுவும் பணி தொடக்கம் – பக்தர்கள் மகிழ்ச்சி! | Madurai Meenakshi Amman Temple Mandapam renovation work initiated


மதுரை செங்குளம் கிராமத்தில் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்துக்குக் கொண்டுவரப்பட்டு சிற்பத் தூணாக உருவாக்கும் பணி நடைபெற்று வந்தது.

இதனிடையே வசந்தராயர் மண்டப சீரமைப்புப் பணிகள் தாமதமாகி வருகின்றன என்று மதுரை மக்கள் புகார் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில்தான் இங்கு வடிக்கப்பட்ட முதல் சிற்பத்தூண் கடந்த 27-ம் தேதி வீரவசந்தராயர் மண்டபத்தில் நிறுவப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் தொடங்கின.

கலெக்டர் அனீஷ் சேகர் - தக்கார் கருமுத்து கண்ணன்

கலெக்டர் அனீஷ் சேகர் – தக்கார் கருமுத்து கண்ணன்

இன்று காலையில் மீனாட்சியம்மன் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு ஓதுவார்கள் தேவார திருமுறைகள் ஓத, சிவாசார்யர்கள் வேதமந்திரங்கள் முழங்க, முதல் தூண் பிரம்மாண்ட எந்திரம் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டது.

Source link


Leave a Reply

Your email address will not be published.